Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிராவிடண்ட் ஃபண்ட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்த பரிந்துரை

நிதியமைச்சகம் அடுத்தச் சில வாரங்களில் பிபிஎஃப் மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்புகள் அடுத்தச் சில வாரங்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிராவிடண்ட் ஃபண்ட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்த மத்திய அரசுக்கு  ஊழியர் சேமலாப நிதியம் அமைப்பு (ஈபிஎஃப்ஓ) பரிந்துரை செய்துள்ளது. இப்போது பிராவிடண்ட் ஃபண்ட்களுக்கான வட்டி விகிதம் 8.75 சதவிகிதமாக உள்ளது. இதை 8.95 சதவிகிதமாக அதிகரிக்க ஈபிஎஃப்ஓ பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP