Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹிந்துஸ்தான் யுனிலிவர் டிவிடென்ட் கொடுக்க முன்வந்துள்ளதன் காரணம்?

ஹிந்துஸ்தான் யுனிலிவர் தன்னிடம் உபரியாக உள்ள தொகையை தனது பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடென்டாக கொடுக்க திட்டமிட்டுள்ளது. ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் தன்னுடைய லாப நஷ்டத்தை சமநிலைப் படுத்துவதற்காக வைத்துள்ள பொது ரிசர்வ் தொகையான ரூ. 2,187 கோடியை அதன் பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடென்டாக தர முடிவெடுத்துள்ளது.

ஆனால் அது சிறப்பு டிவிடென்ட், பங்குகளைத் திரும்ப வாங்கிக்கொள்வது அல்லது போனஸ் கடன் பத்திரங்கள் இவற்றில் எந்தப் ப்ராடக்ட் மூலம் வழங்கப் போகிறது என்பது, முக்கிய நபர்களின் ஒப்புதலுக்குப் பிறகே அதிகாரபூர்வமாக தெரிய வரும்.  ஆனால் ஹிந்துஸ்தான் யுனிலிவர் 14 ஆண்டுகளுக்கு முன்பே போனஸ் கடன் பத்திரங்களைத் தன்னுடைய பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கி ஆச்சர்யமளித்தது.

தற்போது புதிய நிறுவனங்கள் சட்டம் நடைமுறைக்கு வந்தப் பிறகும் முதன்முறையாக இந்நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்தான். மேலும் ஒரு நிறுவனம் தன்னிடம் உபரியாக உள்ள தொகையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி லாபம் பார்க்க டிவிடென்டாக வழங்குவது ஒரு சிறந்த வழியாக பங்குச் சந்தை நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. 

பிஎஸ்இ 500 பட்டியலில் உள்ள நூற்றுக்கும் மேலான நிறுவனங்கள் கடந்த 2015 நிதி ஆண்டில் அதிகளவில் டிவிடென்ட் வழங்கியுள்ளன. மேலும் இந்த நிறுவனங்கள் இந்த 2016 நிதி ஆண்டிலும் சிறப்பாக செயல்பட்டிருப்பதால் ஹிந்துஸ்தான் யுனிலிவர் அறிவிப்பை தொடர்ந்து டிவிடென்ட் அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்தப் போக்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைத் தருவதாக இருக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ