Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஐபிஓக்களில் அதிகமாக முதலீடு செய்ய காரணம்?

டிசம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஐபிஓக்களில் அதிகமாக முதலீடு செய்துள்ளது. டாக்டர் லால் பாத் லேப்ஸ், அல்கெம் லெபாரட்டரிஸ் மற்றும் நாராயண ஹிருதயாலயா போன்றவை டிசம்பரில் பொதுப் பங்கு வெளியிட்டன. அவை ஈட்டிய மொத்த தொகை ரூ. 2,500 கோடி. இதில் ரூ. 900 கோடி ரூபாய் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

செபி வெளியிட்டுள்ள விவரங்களின்படி கடந்த மாதத்தில் பங்குச் சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு ரூ. 4,500 கோடி ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் செய்யப்பட்ட முதலீடுகளில் ரூ. 5க்கு ஒரு ரூபாய் வீதம் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஐபிஓ-க்களுமே ஃபார்மா துறையைச் சார்ந்தவை என்பது மற்றுமொரு முக்கியமான காரணம். சந்தை இறக்கத்தில் இருக்கும்போதும் ஃபார்மா துறைக்கு நல்ல வரவேற்பு இருப்பதையே இது காட்டுகிறது. மேலும் மிட்-கேப் பங்குகளைக் காட்டிலும் இந்த மூன்று ஐபிஓக்களும் பட்டியலிடப்பட்டப் பிறகு நல்ல லாபம் கொடுத்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ