Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீடுகள் வெளியேருவதால் சந்தை மேலும் இறங்குமா?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அதிகளவில் வெளியே எடுத்து வருகிறார்கள். இதனால் சந்தை மேலும் இறங்குமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 14 வர்த்தக நாட்களில் ரூ. 9,600 கோடி மதிப்புள்ள பங்குகளிலிருந்து தங்கள் முதலீடுகளை எடுத்து கொண்டு வெளியேறியுள்ளனர். ஆனால் இதனால் முதலீட்டாளர்கள் பதட்டப்பட தேவையில்லை, ஏனெனில் வெளிநாட்டினர் தங்கள் முதலீடுகளை எடுத்துக்கொண்டு வெளியேறும், அதே சமயத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளது.

அந்த 14 வர்த்தக நாட்களில் ரூ. 9,200 கோடி ரூபாய் உள்நாட்டு முதலீட்டாளர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளை அதிகரித்துள்ளன. கடந்த 2015-ம் வருடத்தில் ரூ. 80,000 கோடி முதலீடு செய்துள்ளன. சந்தை இறக்கத்தில் இருக்கும்போதும் நீண்டகால அடிப்படையில் நிச்சயம் லாபம் இருக்கும் என்பதை உணர்ந்து ரூ. 3200 கோடி ரூபாய் வரை இவை முதலீடு செய்துள்ளன.

பங்குகள் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் வாங்கி முதலீடு செய்ய வேண்டும் என்று முதலீட்டாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்தியச் சந்தை வளர்ச்சிப் பாதையில் இருப்பதை நம்புவதையும் காட்டுகிறது. ஏனெனில் சந்தை வீழ்ச்சியடைந்த 1998, 2002 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறினாலும் துணிந்து சந்தையில் பங்குகளை வாங்கி முதலீடு செய்த உள்நாட்டு முதலீட்டாளர்கள்கள் பின்னாளில் நல்ல லாபம் பெற்றுள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ