Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விப்ரோவின் காலாண்டு முடிவு... அதன் பங்குகளில் எதிரொலிக்குமா?

நம் நாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ 2015 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் நிகர லாபம் 2 சதவிகிதம் உயர்ந்து ரூ. 2,234 கோடியாக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் விப்ரோ லாபம் ரூ. 2,192.8 கோடியாக இருந்தது. மேலும் இந்தக் காலாண்டில் விப்ரோவின் வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.1 சதவிகிதம் உயர்ந்து ரூ. 12,951.6 கோடியாக உள்ளது.

சென்னையில் பெய்த பெருமழை காரணமாகத் தேங்கிய வெள்ளத்தினால் பெரும்பாலான நிறுவனங்களின் தொழில்களைப் போலவே விப்ரோவின் தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டது. அதன் வருவாய் மற்றும் செலவு கணக்கு விகிதம் 21.8 சதவிகிதத்திலிருந்து 20.2 சதவிகிதமாகக் குறைந்தது. இருந்தபோதிலும் இந்தக் காலாண்டில் அது நல்ல லாபத்தையே அடைந்திருக்கிறது. மேலும் வரும் காலாண்டில் விப்ரோ மிகச் சிறப்பாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள அபிதாலி நீமுச்வாலா ஆக்கபூர்வமான பல நடவடிக்கைகளுடனும், ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்துடனும் திறமை வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு தங்களுடைய வாடிக்கையாளர்களின் தேவையை தரமாக மிக விரைவாகவும் முடிக்கும் வகையில் செயல்படுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ