Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா! ஐநா தகவல்

ஐநாவின் தெற்காசிய நாடுகளுக்கான பொருளாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2016ஆம் ஆண்டில் 7.3 சதவிகிதமாகவும், 2017 ஆம் ஆண்டில் 7.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

நடப்பு ஆண்டில் உலக அளவில் பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், உலோகங்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவில் பொருளாதாரச் சூழல் மேம்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தெற்கு ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ