Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி வளர்ந்த நாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யலாம்!

இந்திய ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருவதையடுத்து மத்திய அரசு ஏற்றுமதியை ஊக்குவிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வளர்ந்த நாடுகளுக்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதியை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவிலிருந்து மருந்துபொருட்களை வளர்ந்த நாடுகளுக்கு அனுப்பும்போது பல சிக்கல்கள் இருந்தன. நம்முடைய மருந்துகளை அங்கே விற்பதற்கு சுகாதாரம் மற்றும் நலத் துறை அமைச்சகத்திடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்தச் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

தற்போது சன் ஃபார்மா, ரான்பாக்ஸி, வொக்கார்ட், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் சிப்லா போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. இவற்றில் அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு மட்டும் 55 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நாடுகளில் மருந்து பொருட்களை விற்பனைச் செய்ய அவற்றிடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும். இதனால் ஏற்றுமதி தாமதமாக நடந்து வந்தது.

ஆனால் இனி அதற்கு அவசியமில்லை என்பதால் மருந்து பொருட்கள் ஏற்றுமதி எளிதாகவும் விரைவாகவும் நடக்கும் என்று கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close