Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடலோர பொருளாதார மண்டலம்; மத்திய அரசு புது பிளான்

நம் நாட்டின் உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலோர பொருளாதார மண்டலங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.


நாடு முழுவதும் கடலோர பகுதி கிட்டத்தட்ட 7,500 கிலோ மீட்டர் நீளத்துக்கு இருக்கிறது. இதையொட்டி பல மாநிலங்கள் உள்ளன. துறைமுகங்களும் உள்ளன. இதை உற்பத்தி துறைக்கு சாதகமாக பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களை போல, இந்த கடலோர பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட  உள்ளன. இதுபோன்ற கடலோர பொருளாதார மண்டலங்கள் சீனாவில் இருக்கின்றன. இவை முதலீட்டை ஈர்க்க பெரிதும் உதவுகின்றன. இதனால் உள்நாட்டு உற்பத்தி பெருகுவது மட்டுமின்றி, கடலோர பகுதி என்பதால் ஏற்றுமதிக்கும் மிக வசதியாக உள்ளன.

இதை முன்னுதாரணமாக கொண்டு இந்தியாவிலும் இதை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடலோர பொருளாதார மண்டலங்கள் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close