Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவிலேயே மிகப் பெரிய சுத்திகரிப்பு ஆலை

நம் நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்க உள்ளன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனங்கள் சேர்ந்து மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மஹாராஷ்டிர மாநிலத்தில் அமைக்க உள்ளன.

இதற்காக இந்த நிறுவனங்கள் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளன. இரண்டு கட்டங்களாக இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தொடங்கப்பட உள்ளது. 4 கோடி டன் ஒரு பகுதியாகவும், 2 கோடி டன் ஒரு பகுதியாகவும் தொடங்கப்படும். முதல் கட்டமாக தொடங்கப்படும் திட்டத்துக்கு ஒரு லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை மேற்கு கடலோர பகுதிகள் வழியாக கையாளுவது எளிது என்பதால் எண்ணெய் நிறுவனங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தில் மிகப் பெரிய சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ