Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச்சந்தை வீழ்ச்சி: முதலீட்டாளர் சொத்து மதிப்பு ரூ.7.9 லட்சம் கோடி சரிவு!

இந்திய பங்குச்சந்தையில் ஏற்படும் தொடர் சரிவால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 7.9 லட்சம் கோடி சரிவு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ரூ.100.37 லட்சம் கோடியாக இருந்த பிஎஸ்இ பங்குகளின் சந்தை மதிப்பு இப்போது ரூ.92.40 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் 'பிஎஸ்இ' சந்தை மதிப்பு இதுவரை 7.96 லட்சம் கோடி ரூபாய் சரிந்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டு ஐந்து சதவிகிதம் பங்குச்சந்தை சரிந்திருந்தது. ஆனாலும் 2015 ஆம் ஆண்டு பிஎஸ்இ நிறுவனங்களின் சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி உயர்ந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து தொடர்ந்து முதலீடுகளை வெளியே எடுத்துவந்தாலும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP