Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வளமான வாழ்க்கைக்கு வித்திட்ட "முதலீட்டு விழிப்புணர்வு விழா"

சென்னை பல்லாவரத்தில்...

வளமான வாழ்க்கைக்கு வித்திட்ட "முதலீட்டு விழிப்புணர்வு விழா"


நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்  இணைந்து "வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு" என்கிற தலைப்பில் அண்மையில் சென்னை பல்லாவரத்தில்  முதலீட்டு  விழிப்பு உணர்வு கூட்டத்தை நடத்தியது. இதில் மாற்றுத் திறனாளி, தம்பதியர் உட்பட பல வாசகர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

 


முதலில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்  தமிழ்நாடு தலைவர்  எஸ்.ஹரீஷ், மியூச்சுவல் ஃபண்ட் அடிப்படை விஷயங்கள் குறித்து பேசினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகளை மேற்கொண்டால் எதிர்காலத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை நண்பர்கள் இருவரை ஒப்பீட்டின் மூலம் காட்சிகளாக  விளக்கி காட்டினார். நம்மவர்களுக்கு 40 வயதுக்கு மேல்தான் முதலீடு செய்ய வேண்டும் என்கிற எண்ணமே வருகிறது. அதனை மாற்றி வேலைக்கு சேர்ந்த 25, 30 வயதிலே முதலீட்டை ஆரம்பித்தால் வளமாக வாழலாம் என்றார்.  

 

 

 

இவரைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் "மியூச்சுவல் ஃபண்ட் ஏன் தேவை? இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெளிவாக விளக்கினார்.

 

 

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் முக்கியம் அம்சங்கள் என்ன? என்பதை தெள்ளத் தெளிவாக வாசகர்களுக்கு எடுத்த்துரைத்தார்.  மேலும், பங்குச் சார்ந்த முதலீட்டில் எப்போது முதலீட்டை ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமானது அல்ல. எவ்வளவு நாளைக்கு முதலீட்டை தொடர்ந்து வைத்திருக்கிறீர்கள் என்பதில்தான் முக்கியம் என்பதை விளக்கி சொன்னார்.  வாசகர்களும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு தங்களுடைய சந்தேகங்களையும் தீர்த்துக்கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதில் கலந்துகொண்ட வெங்கடேஷ் என்கிற வாசகர் நாணயம் விகடன் புத்தகத்தை தொடர்ந்து படிப்பதாகவும், எஸ்ஐபி முறையில் பணத்தை முதலீடு செய்து மிகுந்த லாபம் அடைந்ததாகவும் கேள்வி நேரத்தின்போது கூறினார். சரஸ்வதி பூஜையின்போது மற்ற புத்தகங்களை வைப்பதுபோல் நாணயம் விகடன் புத்தகங்களை வைப்பதாகவும், வீட்டில் புத்தக அலமாறி ஒன்றை உருவாக்கி நாணயம் விகடன் புத்தகங்களை பாதுகாத்து வருவதாகவும் கூறினார். இதனால் என்னுடைய தந்தை சில சமயங்களில் என்னை "நாணயம் விகடன் பைத்தியம்" என்றும் அழைத்தும் வருகிறார். இதை கூறியதும் அரங்கத்தில் பலத்த சிரிப்பொலியும், கைதட்டலும் அவருக்கு கிடைத்தது. இவரைப்போலவே மற்ற வாசகர்களும் நாணயம் விகடன் புத்தகத்தை படித்து பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

 

சோ.கார்த்திகேயன்

 படம்: ஜெ.விக்னேஷ் (மாணவப் பத்திரிக்கையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ