Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் லாபம் 20% அதிகரிப்பு!

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி  நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் 20 சதவிகிதம் உயர்ந்து ரூ. 3,356.80 கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கியின் இதர வருவாய் அதிகரித்தால் லாபம் அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருவாய் 24 சதவிகிதம் உயர்ந்து ரூ.7,068.50 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில்  ரூ. 5,699.90 கோடியாக இருந்தது.

வங்கியின் இதர வருவாய் ஆன கட்டணம், கமிஷன், பாரக்ஸ் போன்றவை 13.3 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து ரூ.2,872.20 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் ரூ.2,534.90 கோடியாக இருந்தது.
மேலும் வங்கி மொத்த வாராக் கடனின் அளவானது செப்டம்பர் காலாண்டில் 0.91 சதவிகிதமாக இருந்தது. இது மூன்றாவது காலாண்டில் 0.97 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும் நிகர வாராக் கடனின் அளவானது 0.25 சதவிகிதத்திலிருந்து 0.29 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ