Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இண்டிகோ ஏர்லைன்ஸ் லாபம் 24 சதவிகிதம் அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பயணிகள் விமானச் சேவை நிறுவனமாக செயல்பட்டு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ், டிசம்பர் மாத காலாண்டில் ரூ. 657 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டைக் காட்டிலும் 24 சதவிகிதம் அதிகம்.

நாட்டின் பயணிகள் விமானப் போக்குவரத்தில் நிலையான மற்றும் நம்பகத் தன்மையான சேவை அளிக்கும் நிறுவனங்களில் முக்கியமானதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கருதப்படுகிறது. பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தாலும் அதன் பங்குகள் அதிக அளவில் இறக்கம் அடையாமல் இருக்க அதன் தொழில் வளர்ச்சி ஒரு முக்கிய காரணம்.

இந்நிறுவனம் மற்ற விமான சேவை நிறுவனங்களைக் காட்டிலும் தள்ளுபடி மற்றும் சலுகையின் மூலம் அதிக அளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகள் 12 சதவிகிதம் அதிகரித்து ரூ. 4,407 கோடியாக உள்ளது. அதன் நிகர லாபம் ரூ. 657 கோடி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close