Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடிஎஃப்சி பேங்கின் நிகர லாபம் ரூ.242 கோடி!

ஐடிஎஃப்சி பேங்கின் டிசம்பர் காலாண்டு முடிவு வெளியாகி உள்ளது. இந்த வங்கி பட்டியலிடப்பட்ட பிறகு வெளியாகி உள்ள காலாண்டு முடிவு ஆகும். இந்தக் காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் ரூ. 242.20 கோடியாக உள்ளது.


நிகர வட்டி வருமானம் ரூ.404.20 கோடியாக உள்ளது. வங்கியின் இதர வருமானம் ரூ.200 கோடியாக உள்ளது. மேலும் டிசம்பர் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் 3.1 சதவிகிதமாகவும், நிகர வாராக் கடன் ஒரு சதவிகிதமாகவும் உள்ளது. அதாவது மொத்த வாராக் கடன் ரூ. 1,462.25 கோடியாகவும், நிகர வாராக்கடன் ரூ.453.41 கோடியாகவும் உள்ளது. இது ஐடிஎஃப்சி நிறுவனத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு உள்ள என்பிஏவின் மதிப்பாகும்.

ஐடிஎஃப்சி வங்கி, ஐடிஎஃப்சி நிறுவனத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு அதன் நிகர சொத்து மதிப்பு ரூ.6234.56 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close