Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலில் சென்னை, கோவை ஸ்மார்ட் சிட்டி ஆகிறது!

முதல் கட்டமாக அமைக்கப்பட உள்ள 20 ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 20 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

சென்னை, கோவை, புவனேஸ்வர், புனே, ஜெய்ப்பூர், சூரத், கொச்சி, அஹமதாபாத், ஜபல்பூர், விசாகப்பட்டினம், சோலாப்பூர், தேவங்கிரி, இந்தூர், காக்கிநாடா, பெல்காம், உதய்பூர், குவஹாத்தி, லூதியானா, போபால், புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் போன்ற 20 நகரங்கள் முதல்கட்டமாக ஸ்மார்ட் சிட்டிகளாக அமைக்கப்பட உள்ளன.

இதில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 20 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் 5 தலைநகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை நகரங்கள் ஸ்மார்ட்சிட்டி ஆகின்றன.

அடுத்த 5 ஆண்டுகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடையும். நகரங்களுக்கு இடையேயான போட்டியின் அடிப்படையிலேயே ஸ்மார்ட் சிட்டிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 1.52 கோடி பேர் இந்த ஸ்மார்ட்சிட்டி தேர்வில் ஈடுபட்டனர். ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்திலிருந்து 12 நகரங்களின் பெயர்கள் ஏற்கனவே பரிந்துரை செய்ய‌ப்பட்டிருந்தது. இதில் முதல்கட்டமாக சென்னை, கோவை நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி நகரங்களாக அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ