Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர்டெல் நிகர லாபம் 22 சதவிகிதம் சரிவு!

நம் நாட்டில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிகர லாபம் 22 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 22.21 சதவிகிதம் சரிந்து ரூ.1,117 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு இதேக்காலக்கட்டத்தில் ரூ.1,436 கோடியாக இருந்தது. அதிக உள்கட்டமைப்பு மற்றும் நிதி செலவு காரணங்களால் ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் சரிவடைந்துள்ளது.

அதேசமயம் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 3.7 சதவிகிதம் உயர்ந்து ரூ.24,066 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது ரூ.23,217 கோடியாக இருந்தது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ