Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்

உலகின் 50 பணக்காரர்கள் பட்டியலை வெல்த் எக்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மூன்று இந்தியர்கள் முகேஷ் அம்பானி, திலீப் சாங்வி மற்றும் அசிம் பிரேம்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இவருடைய சொத்துமதிப்பு 8,740 கோடி டாலர். அடுத்தபடியாக ஸ்பெயின் தொழிலதிபர் அமான்சியோ  ஒர்டேகா கோனா 2வது இடத்திலும், சர்வதேச முதலீட்டாளர் வாரன் பபெட் 3வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை முகேஷ் அம்பானி 2,480 கோடி டாலர் சொத்துமதிப்புடன் 27வது இடத்திலும், அசிம் பிரேம்ஜி 1,650 கோடி டாலர் சொத்துமதிப்புடன் 43வது இடத்திலும், திலீப் சாங்வி 1,640 கோடி டாலர் சொத்துமதிப்புடன் 44வது இடத்திலும் உள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ