Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4,000 மடங்குக்கும் மேலாக ஆதரவு; ஐபிஓ-வில் புது சாதனை!

ஐபிஓ ஒன்று சந்தையில் 4,000 மடங்குக்கும் மேலாக கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டு (Over subscribed) இருந்தது சீனாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஐபிஒ சந்தையில் புதிய விதிமுறைகள் ஜனவரி 25-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீனாவில் எல்க்ட்ரிசிட்டி ஜெனரேட்டர் தயாரிப்பு நிறுவனமான "ஷென்ழேன் கோலாந்து எனர்ஜி கன்வெர்ஷன் டெக்" என்ற நிறுவனம் புதிய பங்கினை வெளியிட்டு இருந்தது.

இந்நிறுவனம் ஒரு பங்கின் விலை 15.52 யுவான் ஆக நிர்ணயித்து, 16.67 மில்லியன் பங்குகளை விற்பனை என அறிவித்து இருந்தது. இந்நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் பங்குகளை 4,335 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனாவில் பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில் ஐபிஒ ஒன்று 4,000 மடங்குக்கும் மேலாக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது சந்தையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ