Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தப்பு தப்பா கணக்கு போடக்கூடாது; ரகுராம் ராஜன் எச்சரிக்கை!

மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) கணக்கீடு செய்வதற்கு சிறப்பான வழிமுறையை கையாள வேண்டியது அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், தொழிற்சாலை உற்பத்திக்கும் நடுவே வேறுபாடு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவந்தனர். இதனிடையே ஜிடிபி வளர்ச்சியை கணக்கீடு செய்வதில் பின்பற்றப்படும் புதிய நடைமுறை குறித்து சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து ரகுராம் ராஜன் கூறுகையில், "ஜிடிபி வளர்ச்சி குறித்து பேசும்போது, அதை நாம் அளவீடு செய்யும் நடைமுறை குறித்தும் கவனத்தில் வைத்துக்கொள்வது அவசியம். மக்கள் இடம் பெயரும்போது அதனால் மற்றொரு பிராந்தியத்தில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்னொன்றில் உற்பத்தி குறையவும் வாய்ப்புள்ளது. எனவே இடம் பெயரும்போது வளர்ச்சி விகிதத்தை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்" என்று கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ