Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாணயம் விகடன் நடத்தும் முதலாவது ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்!

நாணயம் விகடன், பிப்ரவரி 1, 2 தேதிகளில் சென்னையில்  ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ் என்னும் மாபெரும் கருத்தரங்கத்தை முதல் முறையாக நடத்துகிறது. இந்த கருத்தரங்கத்தில் இந்திய அளவிலும் உலக அளவிலும் முக்கியமான நிபுணர்கள் கலந்துகொண்டு பேசவிருக்கிறார்கள். பிப்ரவரி 1-ம் தேதி முழுக்க நிதி மற்றும் முதலீடுகள் பற்றியும், பிப்ரவரி 2-ம் தேதி தொழில் துறை பற்றியும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த கருத்தரங்கு ஏன் நடத்தப்படுகிறது, அதற்கான அவசியம் என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்.


 

நாணயம் விகடன் கருத்தரங்கு ஏன்?

சர்வதேச அளவில் நம் இந்திய நாடு வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டு வருவதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 2015-16-ம் நிதி ஆண்டில் 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் உலக வங்கி சொல்லி இருக்கிறது.
 
வலுவான சீர்திருத்தங்களை மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதால், 2015-ல் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் இந்தியா 7-வது இடத்தில் இருப்பதாகவும், 2015-2016-ல் இந்திய பொருளாதாரம் 7.5 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதி ஆணையம் (IMF) தெரிவித்துள்ளது.
 
2014-ம் நிதி ஆண்டில் 6.9 சதவிகிதமாக இருந்த இந்திய பொருளாதாரம், 2015-ல் 7.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 2013-ல் ரூ.118.23 டிரில்லியனாக இருந்த இந்திய பொருளாதாரம்,  2014-ல் ரூ.129.57 டிரில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-ல் குறிப்பாக, நிதி, இன்ஷூரன்ஸ், ரியல் எஸ்டேட் மற்றும் வணிக சேவைகள் 11.5 சதவிகிதமும், வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல்தொடர்பு சேவைகள் 10.7 சதவிகிதமும் வளர்ச்சி அடைந்தது.
 
கோல்ட்மேன் சாக்‌ஸ் நிறுவனம் 2015 செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா 2016 முதல் 2020 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 8% வரை வளர வாய்ப்புள்ளதாக சொல்லி இருக்கிறது. வங்கி, நவீன தொழில்நுட்பம், நகரமயமாக்கல் மற்றும் கட்டுமானத் துறைகளில் நடக்கும் சீர்திருத்தங்கள் இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்றும் கோல்ட்மேன் சாக்ஸ் தனது அறிக்கையில் சொல்லி இருக்கிறது.
 
சாதகமான பொருளாதார சூழல் மற்றும் குறைந்த பணவீக்கம் காரணமாக உலக அளவில் இந்திய நுகர்வோர் நம்பிக்கை தொடர்ந்து ஆறாவது காலாண்டாக அதிகரித்துக் காணப்படுவதாக ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது. நம் நாட்டின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நிய நேரடி முதலீடு வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. கடந்த 2015-ல் இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு சுமார் 34.9 பில்லியன் டாலர். 2014-ல் இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு வெறும் 21.6 பில்லியன் டாலர் மட்டுமே என்கிறது நொமூரா ஆய்வு நிறுவனம்.
 
நம் நாட்டின் மொத்த ஜி.டி.பி.யில் அந்நிய நேரடி முதலீடானது 2015-ல் 1.7 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது. இதுவே 2014-ல் 1.1% என்கிற அளவில் மட்டுமே இருந்ததாகவும் சொல்கிறது நொமூரா. இதனால் சராசரி இந்திய மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். இதனால் வளர்ச்சி பெருகி முதலீட்டாளர்களுக்கு நன்மை உண்டாகும்.  தற்போதைய நிலையில் நமது ஜி.டி.பி.யில். உற்பத்தித் துறையின் பங்கானது சுமார் 15 சதவிகிதமாக உள்ளது. மத்திய அரசாங்கம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் ஜி.டி.பி.யில் உற்பத்தித் துறையின் பங்களிப்பானது 25 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
மூடீஸ் நிறுவனம், இன்றைய உலக பொருளாதார நிலை குறித்தும் எதிர்காலம் குறித்தும் ஐக்கிய நாடுகள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், நம் நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி 2015-ல் 7.6 சதவிகிதமாகவும் 2016-ல் 7.7 சதவிகிதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக சொல்லி இருக்கிறது. உலக வங்கி மிக சமீபத்தில் சர்வதேச பொருளாதார நிலை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக சொல்லி இருக்கிறது. 2015-ன்படி இந்தியா மிக வேகமாக வளரும் நாடாக இருப்பதாகவும், இந்தியாவின் ஜி.டி.பி. 2015-ல் 7.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் உலக வங்கி சொல்லி இருக்கிறது.
 
சுருக்கமாக, இனிவரும் காலத்தின் இந்திய ஜி.டி.பி.யானது 7 முதல் 9 சதவிகிதம் என்கிற அளவில் தொடர்ந்து வளரும். இந்த நிலையில், தற்போது 2 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நாடாக இருக்கும் நம் இந்தியா, அடுத்த பத்தாண்டுகளில் 4 முதல் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நாடாக உயரும். இதன் மூலம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். இந்த நிலையில், நாணயம் விகடன் நடத்தும் இந்த ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் கான்க்ளேவ் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதற்காகவே இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
 
இந்த கருத்தரங்கில் பங்குச்சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதித் திட்டமிடல், பிஸினஸ், ஸ்டார்ட் அப், சர்வதேச பொருளாதாரம் உட்பட பல தலைப்புகளில் நிபுணர்கள் பேசுகின்றனர்.

ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ் - முதல் நாள் நிகழ்ச்சி நிரல்:


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ் - இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல்:


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close