Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.12,000 கோடிக்கு பங்கை விற்க டிஎல்எஃப் திட்டம்

இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப், தனது துணை நிறுவனமான டிஎல்எஃப் சைபர் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் 40 சதவிகித பங்கை விற்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.12,000 கோடி ஆகும்.

மீதமுள்ள 60 சதவிகிதம் பங்கை டிஎல்எஃப் நிறுவனத்திடம் இருக்கும். இதற்கான நிபந்தனை ஒப்பந்தமானது மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதத்தில் போடப்பட்டு ஜூலை மாதத்தில் ஒப்பந்தம் முடிவாகும் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த விற்பனை மூலமாக கிடைக்கும் தொகையை இரண்டு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய டிஎல்எஃப் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.2,000 கோடியாகும்.
டிஎஃல்எஃப் நிறுவனத்தின் நிகர கடன் 5 சதவிகித அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது டிசம்பர் காலாண்டில் ரூ.1,100 கோடி குறைந்து ரூ.21,411 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவில் மட்டும் ரூ. 6,000 கோடி அளவுக்குக் கடன் உள்ளது. மேலும் டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் 24 சதவிகிதம் அதிகரித்து ரூ.163.95 கோடியாக உள்ளது. வருமானமும் 43 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,981 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.2080 கோடியாக இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ