Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னதான் நடக்கு... தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில்

இந்தியாவின் பழமையான தனியார் வங்கிகளில் ஒன்று தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank Limited). இது தூத்துக்குடி நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி நாடார் உறுப்பினர்களால் 1921-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் நாடார் வங்கியாக செயல்பட்டாலும் அதன் பிறகு "தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
 
 
இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்காத நிலையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐபிஓ-க்கு சில பெரும்பான்மை பங்குதாரர்கள் ஆதரவும், சில பெரும்பான்மை பங்குதாரர்கள் எதிர்ப்பும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த வங்கி நாடார் சமூக மக்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட வங்கி. பங்குகளில் வெளியாட்களை முதலீடு செய்ய வைத்து ஏற்கெனவே ஒரு முறை தவறு செய்துவிட்டோம். அதே தவறை மீண்டும் செய்ய விரும்பவில்லை. வங்கிக்கு மூலதனம் தேவை எனில் முதலீடு செய்யவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளை திரும்ப வாங்கவும் தயாராக இருப்பதாக பெரும்பான்மை பங்குதாரர்கள் கூறிவருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ஐபிஓ வெளியீடு குறித்து முக்கியப்புள்ளி ஒருவரிடம் கேட்டோம். அவர் "தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் இயக்குநர்  குழு  ஐபிஓ வெளியிட பரிந்துறை செய்துள்ளது. பங்கு முதலீட்டாளர்கள் இடையே கருத்து வேறு நிலவுகிறது. இதில் சில பங்குதாரர்கள் ஐபிஓ நல்லது என்று நினைக்கின்றனர். ஆனால், சில முதலீட்டாளர்களோ ஐபிஓ வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனினும் பங்குதாரர்களின் விருப்பமே மிக முக்கியம். இன்னும் ஒரிரு வாரத்தில் ஐபிஓ குறித்து  இயக்குனர் என்ன தீர்மானம் செய்துள்ளனர் என்பது தெரிந்துவிடும். ஐபிஓ வருவதற்கு ஓட்டுரிமை நடந்து முடிந்துவிட்டது. ஆனாலும், ஐபிஓ விவகாரம் ஐகோர்ட்டில் உள்ளதால் இது குறித்து  விரிவாக பேச முடியாது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றார். அவர்."
 
கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் ஒரு பங்கு 24,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போதைக்கு ஒரு பங்கின் விலை 93,000 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் சிறந்த இந்திய வங்கிகளின் தர வரிசைப் பட்டியலில், பழமையான தனியார் வங்கிகளில் "தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி" முதலிடம் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ