Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

100 கோடி க்ரூப்களுக்காக வாட்ஸ்அப் புதுமுடிவு!

வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 100 கோடி க்ரூப்களுக்காக புதிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளது.

முன்னதாக வாட்ஸ்அப் க்ரூப் சாட் எனப்படும் குழுவாக சாட் செய்யும் ஆப்ஷனில் அதிகபட்சம் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது இதன் எண்ணிக்கை 256 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் க்ரூப் சாட் முதலில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்தது. அதன்பின்னர் கடந்த நவம்பர் 2014ல் இதன் எண்ணிக்கை 100 பேராக அதிகரிக்கப்பட்டது. இப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் க்ரூப் சாட் எண்ணிக்கைய அதிரடியாக  அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் 2.12.13 எனும் புதிய அப்டேட் மூலம் க்ரூப் சாட்டில் அதிகபட்சம் 256 பேர் வரை இணைத்து கொள்ள முடியும். தற்சமயம் இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற இயங்குதளங்களில் விரைவில் இந்த அப்டேட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுக்க வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அண்மையில் 100 கோடியை எட்டியது. தினமும் வாட்ஸ்அப்பில் 42 கோடி குறுந்தகவல்கள், 160 கோடி படம், 25 கோடி வீடியோக்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. வாட்ஸ்அப்-ல் செயலியில் மட்டும் 100 கோடி க்ரூப்கள் இருக்கின்றன. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை கவர க்ரூப் சாட் எண்ணிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் அதிகரித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close