Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 நாட்களில் 66 மடங்குக்கும் மேலாக விண்ணப்பம்; டீம்லீஸ் ஐபிஓ-க்கு அபார வரவேற்பு!

ஐபிஓ வெளியான மூன்று நாட்களில் 66 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு அபார வரவேற்பை பெற்றுள்ளது டீம்லீஸ் கன்சல்டிங் நிறுவனம்.


மனிதவள கன்சல்டிங் நிறுவனமான டீம்லீஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி 2-4 தேதிகளில் ஐபிஓ வெளியிட்டது. தனது 28,92,063 பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 400-500 கோடி திரட்ட திட்டமிட்டது.

ஐபிஓ வெளியான முதல் இரண்டு நாட்களில் 89 சதவிகித பங்குகள் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. டீம்லீஸ் ஐபிஓ வெளியீட்டின் கடைசி நாளான வியாழன் அன்று அதற்கு விண்ணப்பங்கள் ஏராளமாக குவிய ஆரம்பித்தன. மூன்று நாள் முடிவில் மொத்தம் 19,09,15,620 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் வந்திருந்தன.

ஒதுக்கப்பட்ட பங்குகளின் அளவோடு ஒப்பிடுகையில் அதிகபட்சமாக 66 மடங்கு வரை கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கப்பட்ட பங்குகளின் மொத்த மதிப்பைக் கணக்கிட்டால் ரூ. 27,918 கோடி வருகிறது.

சென்செக்ஸ் 7 சதவிகிதம் விழுந்த நிலையிலும் டீம்லீஸ் ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடையே இத்தகைய வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ