Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.1.14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி!

27 பொதுத் துறை வங்கிகள் கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.


27 பொதுத் துறை வங்கிகள், கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ.27,231 கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. 2013-14-ல் ரூ.34,409 கோடி கடன்களையும், 2014-15-ல் ரூ.52,542 கோடி கடன்களையும் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. ஆக ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன.

2014-15-ம் நிதி ஆண்டில் வாராக் கடன் தள்ளுபடியில் ரூ.21,313 கோடி மதிப்பிலான கடன்களைத் தள்ளுபடி செய்து பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.6,587 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.3,131 கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. இது தவிர, அலகாபாத் வங்கி, பரோடா வங்கி, கனரா வங்கி உட்பட பல்வேறு வங்கிகளும் கணிசமான அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ