Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அருண்ஜெட்லி என்னிக்கு 'அல்வா' கிண்டுவார்?

பிப்ரவரி 29-ம் தேதி,  2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டை பாமரர் முதல் பணக்காரர்  வரை எதிர்பார்த்து காத்துள்ளனர்.



 

இந்த நிலையில் பட்ஜெட் ஆவணங்களை தயாரிக்கும் பணி தொடங்கும் முன், அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவருக்கும் 'அல்வா' கிண்டி வழங்குவது ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மரபாகும்.

பட்ஜெட் தயாரிப்பின்போது அதில் பங்கேற்கும் அலுவலர்களும், பணியாளர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். செல்போனில் கூட தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாது. இ-மெயில் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடியாது. பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வெளியாகிவிடக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
 
இந்த மரபு டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெறும்.

இந்த விருந்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது கையால் அல்வாவைக் கிண்டி தொடங்கி வைப்பார். இந்த ஆண்டு பட்ஜெட் கோப்புகளை அச்சகத்தில் அடிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் எந்த நாள்,  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வழக்கமான நடைமுறையான அல்வா கிண்டி, இனிப்பு கொடுத்து அச்சகத்தில் அச்சடிக்கும் பணியை தொடங்கி  வைப்பார் என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியும்.

சரி,  அருண்ஜெட்லி அல்வா கிண்டுறது இருக்கட்டும்... பட்ஜெட்ல நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க?

- சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ