Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேவை ‘ரோபோட்டிக்ஸ்’ பயிற்சி மையம்! - சீமா எதிர்பார்ப்பு

பட்ஜெட் 2016-17... தொழில்துறை எதிர்பார்ப்புகள் - 1

சோ.கார்த்திகேயன்

 

ருகிற 29-ம் தேதி அன்று 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகவிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் தொழில் துறையினர் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கின்றனர் என்பது குறித்து தொழில் துறை அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் பேசினோம். தங்கள் எதிர்பார்ப்புகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் அவர்கள்.

தேவை ‘ரோபோட்டிக்ஸ்’ பயிற்சி மையம்! 

லட்சுமி நாராயணசாமி, தலைவர், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா)


“சிறு நிறுவனங்கள் குறைந்த அளவிலேயே கொள்முதல் செய்வதால், வர்த்தகர்களிடம் அதிக விலை கொடுத்து மூலப்பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. எனவே, உலக அளவில் மற்ற நாடுகளுடன் போட்டியிடும் வகையில் தொழிற்சாலை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை குறைந்த விலையில் கிடைக்க மூலப்பொருள் வங்கி (Raw material bank)  தொழிற்பேட்டையில் அமைத்திட வேண்டும். உலக தரத்தில் தொழில்துறை எஸ்டேட் ‘industrial estate’ அமைத்து, அதில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வெளிநாட்டு ஆர்டர்கள் எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.



 

கோவையில் அதிக தொழில் வாய்ப்புகள் உள்ளதால், இங்கு ‘ரோபோட்டிக்ஸ்’ பயிற்சி மையத்தை அரசு அமைக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மற்ற துறைகளைப் போல உற்பத்தித் துறைக்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை வழங்க வேண்டும். உலக வர்த்தகத்தில் வெறும் 1% பம்ப் செட் வர்த்தகம் இந்தியாவில் நடக்கிறது. இதை 10 சதவிகிதமாக அதிகரிக்க இந்தியாவில் உற்பத்தி செய்யும் தயாரிப்புகள் உலகம் முழுவதும் விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

இந்தியாவில் ஏற்றுமதி செய்வதற்கு குறைந்த அளவிலேயே சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால், சீனாவில் அதிகளவில் சலுகைகள் வழங்கப்படுவதால், அவர்களுடைய தயாரிப்புகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிடும் வகையில் ஏற்றுமதிக்கான சலுகைகளை அரசு அதிகரிக்க வேண்டும்.

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), மத்திய அரசின், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்திய எரிசக்தி அமைவனம் (BEE) மத்திய அரசின், மின்சார துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இரு வேறு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிலையில் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் ISI தரச்சான்று பெற BIS -ஐ அணுக வேண்டியுள்ளது. மின் திறன் குறியீடு நட்சத்திரக் குறியீடு பெற BEE -ஐ அணுகவேண்டியுள்ளது. எனவே, எளிதாக தொழில் செய்ய BIS மற்றும் BEE இரண்டையும் ஒரே அமைச்சகத்தின் கீழ் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ