Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"மூலதன உதவி வேண்டும்!" - மில்ஸ் அசோசியேஷன் எதிர்பார்ப்பு

  பட்ஜெட் 2016-17... தொழில்துறை எதிர்பார்ப்புகள் - 2

"மூலதன உதவி வேண்டும்!"

எம்.செந்தில்குமார், தலைவர், தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன்.

“செயற்கை நூல் இழைகள் மீதான இறக்குமதி வரி மற்றும் பொருள் குவிப்பு வரி மிக அதிகமாக உள்ளது. இதை இந்த பட்ஜெட்டில் நீக்க வேண்டும். காரணம், இந்த வரியை நீக்கினால்தான், மற்ற நாடுகளில் நூல் விலை எந்தளவுக்கு கிடைக்கிறதோ, அதே விலை இந்தியாவிலும் கிடைக்கும். 


பட்ஜெட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கவேண்டும். செயற்கை நூல் இழைகள் மீதான கலால் வரியை 12.5 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக்  குறைக்க வேண்டும். பட்ஜெட்டில் செயற்கை நூல் இழைகள் மீதான சுங்க வரி 5% மற்றும் சிறப்பு கூடுதல் வரி 4% நீக்கப்பட வேண்டும்.

ஷட்டர்லஸ் லூம்ஸுக்கு கலால் வரி 6% ஆகவும், ஏர்ஜெட் லூம்ஸ், ராப்பியர் லூம்ஸ்,  மற்றும் வாட்டர்ஜெட் லூம்ஸுக்கும் கலால் வரி 12.5% ஆகவும் உள்ளது. இதை இந்த பட்ஜெட்டில் நீக்க வேண்டும்.

டெக்ஸ்டைல் துறை அடிக்கடி பருத்தி விலை உயர்வால் கடுமையாக பாதிப்படைகிறது. எனவே, பருத்தி மூலப்பொருட்கள் கொள்முதல் செய்ய மூலதன உதவி வழங்க வேண்டும்”. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ