Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘இண்டஸ்ட்ரீ ஸ்டேட்டஸ்’ வேண்டும்! - ரியல் எஸ்டேட் எதிர்பார்ப்பு

  பட்ஜெட் 2016-17... தொழில்துறை எதிர்பார்ப்புகள் - 3

 

‘இண்டஸ்ட்ரீ ஸ்டேட்டஸ்’ வேண்டும்! 



சுரேஷ் கிருஷ்ணன், துணைத் தலைவர், கிரெடாய்.

“இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தப்படியாக ரியல் எஸ்டேட் துறையில்தான் அதிகமான வேலைவாய்ப்பு வழங்கப் படுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறைக்கு நிறைய சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை எதிர்பார்த்தோம். ஆனால், பட்ஜெட்டில் எதிர்பார்த்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. 

தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டியில் 2 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இதை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இது இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம். 

எங்களது இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப் பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கட்டுமானத் துறையில் கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும். நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.

 



 

ரியல் எஸ்டேட்  துறைக்கு முக்கியமாக ‘இண்டஸ்ட்ரீ ஸ்டேட்டஸ்’ வழங்க வேண்டும். ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வங்கியில் கடன் வாங்கினால் குறைந்த அளவில் அவர்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற கடன் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதற்குக் காரணம், இதுவரை ரியல் எஸ்டேட்  துறைக்கு ஒரு ‘இண்டஸ்ட்ரீ ஸ்டேட்டஸ்’ இல்லை என்பதால்தான். இதனால்இந்தத் துறைக்கு எந்தவித சலுகைகளும் கிடைப்பதில்லை. 

குறைந்தளவில் கடன் கிடைத்தால் கூடுதலாக கடன் வாங்கி திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள முடியும். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். எனவே, இந்த பட்ஜெட்டிலாவது ரியல் எஸ்டேட் துறைக்கு ‘இண்டஸ்ட்ரீ ஸ்டேட்டஸ்’ வழங்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் துறையில் சேவை வரி என்பது தெளிவே இல்லாமல் உள்ளது. பட்ஜெட்டில் சேவை வரியை சீரமைத்து ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும்.”

தொழில்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கையை நம்பிக்கையுடன் அரசாங்கத்தின் முன்வைத்துள்ளனர். மத்திய அரசாங்கம் இவர்களின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்டு, தொழில் துறையின் மேம்பாட்டுக்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையுடன் எதிர்வரும் பட்ஜெட்டுக்காக காத்திருப்போம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ