Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடும் வீழ்ச்சியிலிருந்து மீண்டது சந்தை!

அமெரிக்க மத்திய வங்கி படிப்படியாக வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற தகவல் வெளியானதன் எதிரொலியாக சர்வதேச பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி காணப்படுகிறது. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் சரிவடைந்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் நேற்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 807.07 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 22,951.83 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 7000-க்கும் கீழ் சென்றது. வர்த்தக முடிவில் 239 புள்ளிகள் சரிந்து 6,976 புள்ளிகளில் நிலைபெற்றது.
21 மாதங்களுக்குப் பிறகு சென்செக்ஸ் 23 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 7000 புள்ளிகளுக்கு கீழும் சென்றது.

இந்த நிலையில் இந்தியப் பங்குச் சந்தைகளும் இன்று (12.02.2016) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 34.29 புள்ளிகள் உயர்ந்து 22,986.12 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  4.60 புள்ளிகள் உயர்ந்து  6980.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
          
விலை அதிகரித்த பங்குகள்

ஐடியா செல்லுலார் 109.65 8.40%
டாடா மோட்டார்ஸ் 298.35 7.96%
பார்தி ஏர்டெல் 324.55 5.13%
கெய்ர்ன் இந்தியா 118.95 4.07%
ஆக்சிஸ் வங்கி 391.10 3.69%

விலை குறைந்த பங்குகள்

பிஎச்இஎல் 104.45 -13.14%
பிபிசிஎல் 772.80 -5.50%
ஓஎன்ஜிசி 193.25 -4.87%
அதானி துறைமுகங்கள் 178.05 -4.71%
பஞ்சாப் நேஷனல் வங்கி 73.65 -4.41%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close