Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்! 'கவர்ச்சி' அறிவிப்புகள் வருமா?

ழக்கமாக, ஆளுநர் உரையைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால் இப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும். அடுத்து அமையும் புதிய அரசு தான், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

 

அதன்படி, தமிழக சட்டப்பேரவை, நாளை (பிப்.16-ம் தேதி) கூடுகிறது. நாளை காலை 11 மணிக்கு 2016-17-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். 

 

'கவர்ச்சி' அறிவிப்புகள் வருமா?
 

விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால் நாளைய இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா அல்லது அதிமுக அரசின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமா என்பது தெரியவில்லை.எனினும் நாளைய இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இடம்பெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ