Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய பங்குச் சந்தைகள் இந்த வாரம் எப்படி?

கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்த நிலையில், வாரத்தின் முதல்நாளான நேற்று சந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏற்படுத்திய தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன.

இந்த நிலையில் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாகவும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும், நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் துவங்கின. அந்த உயர்வு நாள் முழுக்க நீடித்தது. வங்கி தொடர்பான பங்குகள், எண்ணெய் நிறுவன பங்குகள் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் நேற்றைய வர்த்தகம் நாள் முழுக்க எழுச்சியுடனேயே இருந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்ந்து 23,554.12-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 7,162.95-ஆகவும் முடிவடைந்தன.

இன்று (16.02.2016) காலை நேர வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்றைய வர்த்தக நேர முடிவைவிட அதிகரித்து காணப்பட்டது. தற்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 84.90 புள்ளிகள் குறைந்து  23,468.37 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  29.70 புள்ளிகள் குறைந்து  7,135.70 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       

இந்த நிலையில் சந்தை மேலும் ஏறுமா என்பது குறித்து பங்குச்சந்தை நிபுணர் லெட்சுமணராமனிடம் கேட்டோம். அவர் கூறிய பதில்,

"கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் வெளியான ரீடெய்ல் சேல்ஸ் டேட்டா மிகுந்த அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ரீடெய்ல் சேல்ஸ் நன்றாக இருந்ததால் அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது.  அமெரிக்க பங்குச்சந்தையும் சந்தையும் ஏற்றத்துடன் காணப்பட்டது.
இன்று சீன நாணயத்தின் மதிப்பான யுவானும் ஏற்றத்துடன் உள்ளது. சீன நாணய மதிப்பை கீழே இறக்க விடமாட்டோம் என அந்நாட்டு முக்கிய மந்திரி இன்று தெரிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்திய பங்குச்சந்தை அதிக இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது.
சந்தை எந்த அளவிற்கு மேலே போகும்? ஏற்றத்துடன் காணப்படுமா? என்பது கேள்வியாக உள்ளது. நிஃப்டியைப் பொறுத்தவரை 7,150 புள்ளிகளிலிருந்து 7,200 வரை போகலாம். இதற்கு மேல் அதிகரிக்குமா என்பது கேள்வியாக உள்ளது.
இந்த வாரம் முழுவதும் சந்தை ஏற்ற, இறக்கத்துடன் தான் காணப்படும். இந்த வாரம் பெரிய அளவில் டேட்டா என்று எதுவுமே இல்லை. ஆகையால் சந்தை சற்று ஏற்ற, இறக்கத்துடன் தான் காணப்படும்.
மேலும் ஜப்பான் ஜிடிபி டேட்டா நெகட்டிவ் ஆக உள்ளது. அதுபோல் சீனாவில் ஏற்றுமதி குறித்த தகவலும் கவலையளிப்பதுபோலத்தான் உள்ளது. இதனால் அந்த நாட்டு மத்திய வங்கிகள் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய நடவடைக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பிலும் சந்தை ஏற்றம் கண்டுள்ளது என்று கூறலாம்.
நிஃப்டியைப் பொறுத்தவரை 7,050-7,060 ஒரு ரெசிஸ்டன்ஸாக உள்ளது. இதை தாண்டி இப்போது சந்தை ஏற்றத்தில் உள்ளது. அடுத்த ரெசிஸ்டன்ஸ் 7,150லிருந்து 7,200 வரை உள்ளது. நிஃப்டி சப்போர்ட் 6,800-6,830 வரை உள்ளது.
52 வார குறைந்தபட்சவிலை தொடக்கூடிய பங்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. ஆக அதிகளவிலான பங்குகள் இறக்கத்தில்தான் உள்ளன. எனினும் சந்தை மேலும் ஏறுமா என்பது இந்த வாரம் சந்தை முடிவினைப் பொறுத்து தான் எதுவாக இருந்தாலும் கூற முடியும் என்றார் பங்குச்சந்தை நிபுணர் லெட்சுமணராமன்."


          
விலை அதிகரித்த பங்குகள்

அதானி போர்ட்ஸ் 198.75 3.98%
என்டிபிசி 129.00 3.37%
ஓஎன்ஜிசி 204.85 2.25%
கெய்ர்ன் இந்தியா 127.70 2.16%
டாடா பவர் 60.80 2.10%

விலை குறைந்த பங்குகள்

வேதாந்தா 71.85 -4.20%
பேங்க் ஆப் பரோடா 135.35 -2.87%
ஏஷியன் பெயின்ட்ஸ் 841.00 -2.06%
பிபிசிஎல் 766.90 -1.65%
ஹெச்டிஎப்சி 1,064.40 -1.49%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ