Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயனில்லாத பட்ஜெட் தாக்கல் - திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு

2016-17ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் அம்மா பெருமைப் பேச்சுதான் இருக்கிறதே தவிர மக்களுக்குப் பயன்படும் அம்சங்கள் எதுவுமே இல்லை என்று, சட்டப்பேரவையில் இருந்து திமுக, மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

இந்த இடைக்கால பட்ஜெட் அறிக்கையால் மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை என வெளிநடப்பு செய்த ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசவோ கருத்து கூறவோ வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், இடைக்கால நிதிநிலையை அறிக்கையை சமர்ப்பிக்கும் தார்மீக உரிமையை அதிமுக அரசு இழந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். 

பட்ஜெட்டில் சில அம்சங்கள்:

* தமிழ்மொழி வளர்ச்சிக்காக ரூ.32.74 கோடி நிதி ஒதுக்கீடு

* நீதி நிர்வாகத்துக்கு ரூ.985.51 கோடி ஒதுக்கீடு, வருவாய்துறைக்கு ரூ.5,974 கோடி ஒதுக்கீடு.

* மகாமகம் சிறப்பாக நடைபெற 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* தமிழக காவல்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.6,099 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* தமிழக வேளாண்துறைக்கு ரூ.6,938.57 கோடி, கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1,188.88 கோடி ஒதுக்கீடு

* அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு அனுப்பப்படும். திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் உடனே தொடங்கப்படும்.

* தீயணைப்பத்துறைக்கு 227 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
உணவு பாதுகாப்பில் உறுதி செய்ய திட்டங்கள். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய விலையில்லா அரிசி.

* விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட திட்டங்கள்.

* மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள்.

* மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை விலையில்லா புத்தகங்கள்.


இவை தவிர இந்த இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் பேசியவை அனைத்தும் அம்மாவின் பெருமையே தவிர வேறெதுவும் இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close