Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 47ஆயிரம் கோடி! ஓ.பன்னீர்செல்வம் தகவல்

2016-17ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் கடன் 2 லட்சத்து 47ஆயிரம் கோடியாக இருக்கும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
 

 

 2016-17-ம் நிதியாண்டில், அரசின் வருவாய் ரூ.1.52 லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. 2016-17-ம் நிதியாண்டில், அரசின் செலவு 1.61 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ரூ.9 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2016-17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை மட்டும் ரூ.2,47,031 கோடி என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்: 
 

* அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ 609 கோடி ஒதுக்கீடு  

* சாலை திட்டத்திற்கு 2,013 கோடி நிதி ஒதுக்கீடு, வீட்டுவசதி வாரியத்துறைக்கு ரூ.689 கோடி ஒதுக்கீடு

* அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் நலனுக்காக ரூ. 19,841 கோடி ஒதுக்கீடு.

* சமூக நலத்துறைக்கு ரூ. 3,820 கோடி; சுற்றுலாத்துறைக்கு ரூ. 84.66 கோடி ஒதுக்கீடு

* உயர் கல்வித்துறைக்கு ரூ.3,821 கோடி ஒதுக்கீடு

* விளையாட்டு துறைக்கு ரூ.142.88 கோடி; தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.152.27 கோடி ஒதுக்கீடு

* மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கடந்த அரசை விட 127 % நிதி அதிகமாக ஒதுக்கீடு

* 7 லட்சம் பெண்களுக்கு 28 லட்சம் ஆடுகள்; 60 ஆயிரம் பேருக்கு இலவச கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது

* பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உணவு மானியத்திற்கு 5,500 கோடி ஒதுக்கீடு,விலையில்லா வேட்டி,சேலை வழங்கல் திட்டத்திற்கு 495.16 கோடி ஒதுக்கீடு.

* மாநில மொத்த உற்பத்தியில் கடன் 19% மட்டுமே

* நாட்டிலேயே அதிக மருத்துவ கல்லூரிகளை கொண்ட மாநிலம் தமிழகம்

உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ2,42,000 கோடி முதலீட்டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

* உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 4.73 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

* தமிழக அரசின் கடன் ரூ2,47,031 கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தகவல்

* காவிரி முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் உயர்த்தியது, இலங்கை மீனவர்கள் மீட்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திறமையான ஒருங்கிணைப்பால் மீட்பு பணிகள் நடந்து குறுகிய காலத்தில் இயல்பு வாழ்வு திரும்ப வழி செய்தது தமிழக அரசின் சாதனை

* தமிழகம் நாட்டிலேயே பொருளதார வளர்ச்சியில் 2 வது இடம் ( 8 .01 சதவிகிதம்) பெற்றுள்ளது. தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை தீர்க்கப்பட்டது அதிமுக அரசின் சாதனை. தற்போது தமிழக அரசு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.

* இடைக்கால பட்ஜெட்டுக்கு ரூ.60, 610 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது நில அபகரிப்பு சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளன.

* ஈழத்தில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.

* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு சீராக உள்ளது.

* புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ 150 கோடி காவல் துறைக்கு ரூ 6099 கோடி

* கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ 2 கோடி

* தகவல் தொழில் நுட்பத்திற்கு ரூ 185 கோடி 

* அத்திக்கடவு - அவினாசி திட்டம் ரூ.1,862 கோடியில் உடனடியாக செயல்படுத்தப்படும். மேலும் ஆரம்ப கட்ட பணிகள் உடனே துவங்கும்

* குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.348 கோடி நிதி ஒதுக்கீடு.

* 5 ஆண்டுகளில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சிக்கு வித்திட்டது அதிமுக அரசு

* 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இ சேவை மையங்கள் தொடக்கம்.

* குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை வழங்கப்படுகிறது.

* 24 மணி நேரம் செயல்படும் குறைதீர்ப்பு மையம் செயல்படுகிறது.

* 50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை.

* நெடுங்சாலைத்துறைக்கு ரூ.8,486.26 கோடி நிதி ஒதுக்கீடு

* உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 37.52 லட்சம் விவசாயிகளுக்கு பயன்.

* 55 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

* மழை, வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீண்டது.

* போக்குவரத்துறைக்கு ரூ.1,590 கோடி நிதி ஒதுக்கீடு.

* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்திற்கு நிவாரண நிதி.

* மின்சாரத்துறைக்கு ரூ.13,819.03 கோடி நிதி ஒதுக்கீடு.

* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. 

* காவேரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதலில் வெளியானது.

* ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி தாலிக்கு தங்கம்.

* நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள் வழங்கியவர் முதலமைச்சர்.

* பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

* இலங்கைத் தமிழர் நலன்களுக்காக பாடுபடுகிறது தமிழக அரசு.

* தமிழ்மொழி வளர்ச்சிக்காக ரூ.32.74 கோடி நிதி ஒதுக்கீடு

* நீதி நிர்வாகத்துக்கு ரூ.985.51 கோடி ஒதுக்கீடு, வருவாய்துறைக்கு ரூ.5,974 கோடி ஒதுக்கீடு.

* மகாமகம் சிறப்பாக நடைபெற 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* தமிழக காவல்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.6,099 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

* தமிழக வேளாண்துறைக்கு ரூ.6,938.57 கோடி, கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1,188.88 கோடி ஒதுக்கீடு

* அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு அனுப்பப்படும். திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் உடனே தொடங்கப்படும்.

* தீயணைப்பத்துறைக்கு 227 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 

* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி சாதனை படைத்தது.

* 5 ஆண்டுகளில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சிக்கு வித்திட்டது அஇஅதிமுக அரசு.

* உணவு பாதுகாப்பில் உறுதி செய்ய திட்டங்கள். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய விலையில்லா அரிசி.

* விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட திட்டங்கள். 

* மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள்.

* மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை விலையில்லா புத்தகங்கள். 

* மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

* மின்மிகை மாநிலமாக மாற்றிய பெருமை முதலமைச்சரையே சேரும்.

* இலங்கை பிரச்னையில் சர்வதேச கவனத்தை ஈர்த்தவர் முதலமைச்சர்.

* மாநிலமே மகிழும் வண்ணம் வளர்ச்சி தந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா.

* புதுமைகள் பல படைத்து  பெருமை பெற்றவர் முதலமைச்சர் ஜெயலலிதா.

* விற்பனை வரி குறைவால் தமிழக அரசுக்கு ரூ4 ஆயிரம் கோடி இழப்பு

* எதிரிகளால் வெல்ல முடியாத மக்கள் சக்தியாக விளங்குகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ