Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால் சந்தை சரிவு


இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சென்செக்ஸ் 362 புள்ளிகளும், நிப்டி 114 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே ஏற்றத்துடன் துவங்கின. ஆனால் சற்றுநேரம் தான் இந்த ஏற்றம் நீடித்தது. நேற்றைய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர்.

மேலும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 362.15 புள்ளிகள் சரிந்து 23,191.97-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 114.70 புள்ளிகள் சரிந்து 7,100 புள்ளிகளுக்கும் கீழ் சென்று 7,048.25-ஆக முடிந்தது.

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (17.02.2016) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 103.69 புள்ளிகள் குறைந்து  23,088.28 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  36.95 புள்ளிகள் குறைந்து  7011.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
          
விலை அதிகரித்த பங்குகள்

டாக்டர் ரெட்டிகள் லேப்ஸ் 2,908.00 1.83%
பிபசிஎல் 762.25 1.50%
என்டிபிசி 129.30 1.21%
இன்போசிஸ் 1,091.00 1.10%
டாடா மோட்டார்ஸ் 304.05 0.96%

விலை குறைந்த பங்குகள்

வேதாந்தா 68.65 -3.78%
பஞ்சாப் நேஷனல் வங்கி 69.90 -3.59%
யெஸ் பேங்க் 712.50 -2.91%
ஹிண்டால்கோ 63.05 -2.78%
பேங்க் ஆப் பரோடா 127.60 -2.48%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ