Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு

மத்திய அரசு அஞ்சல் அலுவலங்களில் சேமிக்கப்படும் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு ஒரு முறை என்று இருந்த நடைமுறையை, இனி காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என அண்மையில் தெரிவித்தது. இந்த நிலையில் சிறு சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தையும் அதிரடியாக குறைத்துள்ளது.


அதன்படி, சிறு சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம், 1, 2 மற்றும் 3 ஆண்டுகளுக்கான அஞ்சலக டெபாசிட், கிசான் விகாஸ் பத்திரம், 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட் வட்டி விகிதத்தில் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்பிறகு ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் அரசு பத்திர சந்தை விலைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், மாதாந்திர வருவாய் சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், பிபிஎப் ஆகியவற்றில் மாற்றம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ