Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுத்துறை வங்கிகளில் 49% எப்டிஐ: மத்திய அரசு திட்டம்

பொதுத்துறை வங்கிகளில் அன்னிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) உச்சவரம்பை 49 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 
தனியார் துறை வங்கியில் அன்னிய நேரடி தொடர்பான விதிமுறைகள் கடந்த ஆண்டு தளர்த்தப்பட்டன. வெளிநாட்டு முதலீட்டு அளவு 74 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. அதற்கு முன்னர் தனியார் வங்கிகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு 49 சதவிகிதமாக இருந்தது.

இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளில் தற்போது அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு 20 சதவிகிதமாக உள்ளது. இந்த உச்சவரம்பை வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் 49 சதவிகிதமாக உயர்த்த ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆலோசனை ஏற்கப்பட்டால், இது தொடர்பான அறிவிப்பு வரும் மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் என்று தெரிகிறது.

தற்போது, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று 20% வரை பொதுத்துறை வங்கியில் அன்னிய நேரடி முதலீடு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ