Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்


புரிந்து கொண்டு முதலீடு செய்தால், நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்..!


நாணயம் விகடன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து திருச்சியில் அண்மையில்  "எதிர்கால பணத் தேவைக்கான தீர்வு " என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தியது.


அரங்கம் நிறைந்த இந்தக் கூட்டத்தில் முதலில்  ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மதுரை மற்றும் திருச்சி கிளெஸ்டர் மேனேஜர் சஞ்சய் ராமகிருஷ்ணன் பேசினார். அவர் "மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?" என்கிற தலைப்பில் பேசினார்.  நம்முடைய சேமிப்பை பணவீக்க விகிதம் என்கிற பூதம் எப்படி காலி செய்கிறது என்பதை விளக்கிப் பேசினார். அவர் பங்குச் சந்தையை புரிந்து கொண்டு முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும் என்றார்.


 மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் பா.பத்மநாபன்  மியூச்சுவல் ஃபண்ட் அடிப்படை விஷயங்கள், ஃபண்ட் வகைகள் குறித்து விரிவாகப் பேசினார்.  'பணத்தை இன்றைக்கு நீங்கள் பாதுகாத்து சேமித்தால், அது நாளைக்கு உங்களைப் பாதுகாக்கும்" என உதாரணத்துடன் விளக்கிப் பேசினார்.


இறுதியாக நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முதலீடு எப்படி லாபகரமாக இருக்கிறது என்று பேசினார். அவர் தொடர்ந்து மாதா மாதம் முதலீடு செய்யும் முறையான எஸ்ஐபி-ஐ நிறுத்தாமல் தொடர்ந்தால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நிதித் தேவைகளையும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலமே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார்.


'மியூச்சுவல் ஃபண்டில் ஆயிரக்கணக்கான  திட்டங்கள் இருக்கின்றன.அதில் எங்களுக்கு ஏற்ற திட்டங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?, குரோத் ஆஃப்ஷன், டிவிடெண்ட் ஆஃப்ஷன் - எது பெஸ்ட் என்பது தொடங்கி, அண்மையில் வந்திருக்கும் ஃபேக்டா வரைக்கும் முதலீட்டாளர்கள் கேள்விக் கணைகளை தொடுத்தனர். நிதி நிபுணர்கள் அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தனர்.


காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று நடந்த கூட்டத்தில் பலரும் தம்பதி சகிதமாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- சி.சரவணன்


படம்: மா. அரவிந்த் (மாணவர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ