Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோல்டு இ.டி.எஃப்..!


தலைப்பைப் படிச்சதும் புரிஞ்சிருக்குமே... திரட்டுற பணத்தை தங்கத்துல போடுற திட்டம் இது! மொத்தப் பணத்-துல 90% தங்கத்துலதான் முதலீடு செய்வாங்க. மீதியைக் கடன் பத்திரங்கள்ல போடுவாங்க. இல்-லேன்னா, அப்படியே ரொக்கமா வச்சிருப்பாங்க. இதோட யூனிட்டுகளும் பங்குச் சந்தையில வியாபாரம் ஆகுது. இந்த ஃபண்டுல யூனிட்டுங்குறது ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும். என்.எஃப்.ஒ. சமயத்துல குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயா நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.

புதிய வெளியீட்டின்போது நுழைவுக் கட்டணமா 1.5% முதல் 2.5% வரை கொடுக்க வேண்டியிருக்கும். மார்க்கெட்டுக்கு வந்த பிறகு ஒரு யூனிட் (ஒரு கிராம்) கூட வாங்க முடியும்ங்கிறதால, கையில பணம் இருக்கும்போது, அப்பப்போ முதலீடு செஞ்சுக்க வசதியான திட்டம். ஆனா, இதை எஸ்.ஐ.பி. முறையா கணக்குல வச்சுக்க மாட்டாங்க. ஒவ்வொரு தடவை வாங்குற யூனிட்டுகளையும் தனிக் கணக்காத்தான் பராமரிப்பாங்க. இதுக்கான புரோக்கிங் கமிஷன் (நுழைவுக் கட்டணத்துக்குப் பதில்) 0.5% கொடுத்தாப் போதும்.

ஒரிஜினலா தங்கத்தை வாங்கி வைக்-கிறதைவிட, இந்த ஃபண்டுல பணத்தைப் போடுறது பல வகையில லாபகரமானது. தங்கம் களவு போயிடுமோங்-குற கவலை தேவையில்லை. லாக்கர் செலவும் மிச்சம். அது மட்டு-மில்லை... தங்கத்தை வித்தா, சேதாரம், பழைய தங்கம்னு சொல்லி ரேட்டைக் குறைக்கிற பிரச்னையும் இதுல கிடையாது. தேவைப்-படும்போது யூனிட்டுகளை வித்து, லேட்டஸ்ட் மாடல்ல, வீட்டம்மாவுக்கு புது நகை வாங்கிக் கொடுக்கலாம்!

இந்த ஃபண்டுல ஒரு வருஷத்துக்கு மேல முதலீடு செஞ்சா, நீண்ட கால மூலதன ஆதாய வரி, சுத்தமா கிடையாது. தங்கத்துல முதலீடு செஞ்சா இந்த வரிவிலக்கைப் பெற மூணு வருஷம் காத்திருக்கணும். ஒரு வருஷத்துக்குள்ள இந்த ஃபண்டோட யூனிட்களை விற்றால் 15% வரி விதிப்பாங்க. இதுவே தங்கத்தை ஒரு வருஷத்துக்குள்ள விற்றால் 30% வரி!

கோல்டு இ.டி.எஃப். ஃபண்டுல பணம் போட்டா, 'பங்கு பரிவர்த்தனை வரி' (செக்யூரிட்டீஸ் டிரான்ஸ்சாக்ஷன் டேக்ஸ்)ன்னு சொல்லப்படுற எஸ்.டி.டி. கிடையாது. அதேபோல செல்வவரி (வெல்த் டேக்ஸ்) கிடையாதுங்குறதால இதுல எவ்வளவு வேணும்னாலும் முதலீடு பண்ணலாம். இந்தியாவுல இந்த வகை ஃபண்டுகள், தேசிய பங்குச் சந்தையிலதான் வர்த்தகமாகி வருது. தங்கம் சம்பந்தமான ஃபண்டுல பணத்தைப் போட்டாலும், பேப்பர்லதான் தங்கம் இருக்கும், கண்ணால பார்க்க முடியாது. அதேபோல இந்த ஃபண்டுல பணம்போட டீமேட் கணக்கு வேணும். இந்தக் காரணங்களால, பலரும் ஆரம்பத்துல இந்த ஃபண்டுல ஆர்வம் காட்டலை. இதுல இருக்கிற பாதுகாப்பை உணர்ந்ததும், இப்போ இந்த ஃபண்டுக்கு மவுசு அதிகரிச்சிருக்கு.

யாருக்கு ஏற்றது?:

தங்கத்தை முதலீட்டுக் கோணத்தில் பார்ப்பவர்களுக்கு.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ