Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஆர் & டி-க்கு ஊக்கத்தொகை தேவை!” - நாஸ்காம் எதிர்பார்ப்பு

பட்ஜெட் 2016-17... தொழில் துறை எதிர்பார்ப்புகள் - 6

சோ.கார்த்திகேயன்

ன்னும் இரண்டு வாரங்களில் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகவிருக்கிறது. இந்த வாரமும் பல்வேறு தொழில்துறை அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் மத்திய பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்களை  எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டோம். தங்கள் எதிர்பார்ப்புகளை விவரமாக எடுத்துச் சொன்னார்கள் அவர்கள்.

“ஆர் &  டி-க்கு ஊக்கத்தொகை தேவை!”

புருஷோத்தமன், தலைவர், நாஸ்காம்.

“ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதியை வங்கி மற்றும் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களிடமிருந்து நிதி கிடைக்காதபோது ஏஞ்சல் ஃபண்டைத்தான் (angel fund) நாட வேண்டியுள்ளது. எனவே,  வருகிற பட்ஜெட்டில் ஏஞ்சல் வரியை (angel tax) நீக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு என்பது அதிக ஆபத்து உள்ளதால், முதலீட்டாளர்களுக்கு வரி விகிதங்களை சீரமைக்க வேண்டும். வரி தொடர்பான நெறிமுறைகளில் முதலீட்டாளர் களுக்கு உள்ள சிரமங்களையும் போக்கும் வழிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்படுத்தி தரவேண்டும். இதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்போது, சிறிய ஐடி நிறுவனங்களும் இங்கு சிறப்பாகச் செயல்படும் சூழல் உருவாகும். இ-காமர்ஸ் துறை வேகமாக வளர்ந்து வருவதால், அதற்கான வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கித் தரவேண்டும். ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில் உள்ள வர்த்தகப் பரிமாற்றத்தில் தெளிவான நெறிமுறைகளை கொண்டுவர வேண்டும். வரி விதிப்புகளிலும் ஐ.டி நிறுவனங் களுக்கு சாதகமான வரி விதிப்பு திருத்தத்தை அரசு கொண்டுவர வேண்டும். மென்பொருள் துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். எளிதாக தொழில் செய்யும் சூழலையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.’’

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ