Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“தேவை தனி அமைச்சகம்!” - ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு

பட்ஜெட் 2016-17... தொழில் துறை எதிர்பார்ப்புகள் - 7

“தேவை தனி அமைச்சகம்!”

முத்துரத்தினம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா).

“இந்தியாவில் ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகை 20 - 22% வழங்கப்பட்டபோது, ஏற்றுமதி அதிகரித்து காணப்பட்டது. இப்போது ஊக்கத்தொகை 7.5% என்றளவில்தான் உள்ளதால், ஏற்றுமதி குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. எனவே, ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்க வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்.

ஏற்றுமதியைப் பொறுத்தவரை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லாத தால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளாக பின்னலாடை ஏற்றுமதி மந்தநிலையில்தான் காணப்படுகிறது.


சீனாவிலிருந்து, பங்களாதேஷுக்கு பொருட்களை இறக்குமதி செய்ய எந்த வரியும் இல்லை. அதுபோல், பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய எந்தவித வரியும் இல்லை. எனவே, சீன தயாரிப்புகள் இந்தியாவில் ஊடுருவதைத் தடுக்கும் வகையில் பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய இறக்குமதி வரி விதிக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் மத்திய அரசு பங்களாதேஷூடன் ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் மூலம் 2015-ல் மட்டும் இந்தியாவில் ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தியில் சீன பின்னலாடைகள் 40% ஊடுருவியது. இதனால் உள்நாட்டில்  வேலைவாய்ப்பு குறைந்தது.  உள்நாட்டு தொழில்கள் வளர்ச்சியடைய பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய இறக்குமதி வரி விதிக்க வேண்டும்.

சீனா மற்றும் பங்களாதேஷ் நாடுகள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய வரியும் இல்லை என்பதால், அந்த நாடுகள் ஐரோப்பாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கின்றன. எனவே, இந்தியாவும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் ஐரோப்பா நாடுகளுடன் வரி இல்லா ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே விதமான வரி வசூலை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சகம் உள்ளது போல், ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் அதற்கென தனி அமைச்சகம் ஒன்றை அமைக்க வேண்டும்.

எங்களது இந்தக் கோரிக்கைகளை இந்த பட்ஜெட்டிலாவது மத்திய அமைச்சர் நிறைவேற்ற வேண்டும்’’ என்று முடித்தார் அவர்.

தொழில் துறை வட்டாரத்தினரின் இந்த கோரிக்கைகள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close