Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன?

பட்ஜெட் 2016-17... தொழில் துறை எதிர்பார்ப்புகள் - 8

வரும் பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிய அந்த வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகளுடன் பேசினோம். ‘‘15 வருடங்களுக்கும் அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதனால், அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். ஆட்டோமொபைல் துறையை ஆதரிக்கும் விதமாக, ஜி.எஸ்.டி. (Goods and Service Tax), கலால் வரி, வட்டி விகிதம் என ஒட்டுமொத்த வரி அமைப்பை முறைப்படுத்துவது அவசியம். வாடகை முறையில் இயங்கும் வாகனங்களைத் தவிர்த்து, தனிநபர் பயன்பாட்டுக்காக வாங்கப்படும் கார், பைக் ஆகியவற்றின் சந்தை மதிப்பைத் தெரிந்துகொள்ள உதவும் தேய்மான விகிதத்தை மாற்றியமைப்பதன் மூலம், சாலையில் உள்ள பழைய வாகனங்களின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

அதிக நபர்களை (10 - 15) ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கலால் வரி, பேருந்துகளுக்கு இணையானதாக விதிக்கப்பட வேண்டும். ஹேட்ச்பேக், எம்பிவி, இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கமர்ஷியல் வாகனங்கள், அனைத்து வாகன உதிரிபாகங்கள் மீது சுமத்தப்படும் கலால் வரி சலுகை தருவதும் அல்லது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக நிர்ணயிப்பதும் உடனடித் தேவையாகும். அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில், புதிய தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களில் விதிக்கப்படும் ஆரம்ப தேய்மானத்தை நீக்க வேண்டும். அலாய் இரும்பு, அலுமினியம் அலாய், இரண்டாம் பட்ச அலுமினிய அலாய் பொருட்கள் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். வாகனத் தயாரிப்புக்குத் தேவையான Butyl Acrylate-என்கிற ரசாயன பொருளை இறக்குமதி  செய்ய வரி மற்றும் Plastic/Polymers  பொருளுக்கு கலால் வரி குறைக்கப்பட வேண்டும். சென்பாட் (CENVAT) க்ரெடிட் மற்றும் கார் (GAAR) விதிப்பு சரிவர வகைப்படுத்தப்பட வேண்டும்’’ என்று தங்கள் எதிர்பார்ப்புகளை பட்டியல் போட்டனர்.

- ராகுல் சிவகுரு

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close