Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘‘வீடு மற்றும் விடுதி கட்டித் தரவேண்டும்!’’ - டெக்ஸ்டைல் எதிர்பார்ப்பு

‘‘வீடு மற்றும் விடுதி கட்டித் தரவேண்டும்!’’

சக்திவேல்,  தலைவர், டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு.


‘‘கடந்த பட்ஜெட்டில் டெக்ஸ்டைல் துறையில் தொழில் கடன்களுக்கான வட்டிக் குறைப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதன்படி 3% வட்டி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் இயந்திரங்கள் வாங்குவதில் மானியங்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதன்படி மூலதன மானியம் 15 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முக்கியமான கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

பொருளாதார ரீதியாக நம்மைவிட பின்தங்கிய நாடான பங்களாதேஷ், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் டெக்ஸ்டைல் துறையில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, மற்ற நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்த வழிவகைச் செய்ய வேண்டும். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை அதிகரிக்க வேண்டும். இதை சென்ற ஆண்டே வலியுறுத்தினோம். அதை இந்த பட்ஜெட்டிலாவது செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய தங்கும் வசதி இல்லை. தொழிலாளர்களுக்கு வீடு மற்றும் விடுதி கட்டித்  தரவேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு என தனிப்பிரிவை அமைத்து கடன் கொள்கைகளை வகுக்க வேண்டும். இது ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாக இருக்கும். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் அளவுக்கு பெரிய நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும். செயற்கை இழை தயாரிக்க வட்டியில்லா கடன்  வழங்க வேண்டும். சுத்திகரிப்பு ஆலைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

தொழில் துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறும் என்கிற நம்பிக்கையுடன் எதிர்வரும் பட்ஜெட்டுக்காக காத்திருப்போம்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ