Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிநாட்டு கமிஷனுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்ய வேண்டுமா?

 

ஆடிட்டர் ஜீ.கார்த்திகேயன்  பன்னாட்டு வரி ஆலோசகர், கோவை


சாகுல் அமீது ஆம்பூரில் தோல் சம்பந்தமான பொருட்களை தயாரித்து வருபவர். அவரது தந்தையார் செய்து வந்த தொழிலை மேம்படுத்தி உள்நாட்டு வியாபாரம் மட்டும் அல்லாது, தோல் ஹேண்ட்பேக் மற்றும் தோல் ஜாக்கெட் ஆகியவற்றை தயாரித்து வெளிநாடுகளுக்கும் அனுப்பி வியாபாரம் செய்து வருகிறார், பல நாடுகளுக்கு   பொருட்களை ஏற்றுமதி செய்தும்  வருகிறார். ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பல ஏஜென்ட்டுகளை நியமித்து ஆர்டர் பிடித்து வியாபாரம் செய்பவர்.


 

ஏஜென்ட்டுகள் அந்த நாடுகளில் தங்கள் மார்க்கெட்டிங் திறமையில் வியாபாரத்தைப் பெருக்க உதவி செய்பவர்கள். இந்த ஏஜென்ட்டுகளுக்கு கமிஷன் அவர்கள் செய்யும் வியாபாரத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஏஜென்ட்டுகள் அனைவரும் வெளிநாட்டில் வசிப்பவர்கள். சமீபத்தில் வருமான வரி அதிகாரிகள் சாகுல் அமீது தாக்கல் செய்த வருமான வரி அறிக்கைகளை ஆய்வு செய்த போது இந்த  கமிஷன் தொகைக்கு வரிப்பிடித்தம் செய்திருக்க வேண்டும். மேலும் வரிப்பிடித்தம் செய்யாததால் அந்த கமிஷன் தொகையையே செலவுக் கணக்காக கருதப்பட மாட்டாது என்று அறிவித்தனர். ஆகவே, கமிஷன் தொகையை செலவுக் கணக்கில் கொண்டு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டனர். அதாவது, வருமானத்திலிருந்து கழிக்க முடியாதபடி செய்து விட்டனர். இதனால், அவருக்கு ஏராளமான வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வருமான வரிச் சட்டம் என்ன கூறுகிறது?.


வருமான வரிச் சட்டப்பிரிவு 195, வெளிநாட்டிற்கு எந்தச் செலவுக்காக கொடுக்கப்படும் தொகைக்கும் வரிப்பிடித்தம் செய்தபின் தான் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், அதே சட்டத்தில், கொடுக்கப்படும் தொகை இந்தியாவில் வரி செலுத்த வேண்டிய வருமானமாக இருக்கும் பட்சத்தில்தான் அதற்கு வரிப்பிடித்தம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.   இப்போது சாகுல் அமீது வெளிநாட்டுக் கமிஷன் கொடுக்கும்போது அந்த கமிஷன் ஏஜென்ட்டுகள் இந்தியாவில் வரி செலுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி.
 

அந்த வெளிநாட்டு ஏஜென்ட்டுகள் 182 நாட்களுக்கு குறைவாக இந்தியாவில் இருந்தால், அவர்களுக்கு கொடுக்கப்படும் பணமும் அந்நிய செலாவணி மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தால் அந்த வருமானமும் இந்தியாவில் வரிக்கு உட்பட்டதாகாது. ஆகவே, சாகுல் அமீது இந்த வெளிநாட்டு கமிஷன் தொகைக்கு வருமான வரி (TDS) பிடிக்க தேவையில்லை. இதுகுறித்து பல கருத்துகள் நிலவினாலும் சென்னை உயர் நீதிமன்றம் (High Court)  வரிதாரர்களுக்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பின்படி சாகுல் அமீது வெளிநாட்டுக் கமிஷனுக்கு வருமான வரி (TDS) பிடிக்க தேவையில்லை. கமிஷன் ஒப்பந்தத்திலும் இது குறித்து சில தெளிவான குறிப்புகள் இருக்க வேண்டும்.

இப்போது சாகுல் அமீது மேல் முறையீட்டில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close