Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு? அதிரடி சர்வே முடிவு!

ந்திய நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்கான பணிகளைத் துவங்கியுள்ள நிலையில் எந்தெந்த துறைகளில், எவ்வளவு சதவிகிதம் ஊதிய உயர்வு இருக்கும் என்பதை Aon Hewitt எனும் தனியார் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி முடிவினை வெளியிட்டுள்ளது.

 


2016-ம் ஆண்டு ஊதிய உயர்வு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சராசரியாக 10.3% ஊதிய உயர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆய்வில் இகாமர்ஸ், லைஃப் சயின்சஸ், மீடியா போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்படி, 2016ல் அதிக அளவாக இகாமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 15.60% ஊதிய உயர்வு அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.



ஆய்வில், இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சராசரியாக 10.3% ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் 2016-ம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளைவிட (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) இந்தியாவில் சராசரி சம்பள உயர்வு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ