Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10 ஆண்டில் 18 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கி குவித்த இந்தியர்கள்!


கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியர்கள் 26,700 கோடி டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் கோடி ரூபாய்க்கு தங்கம் வாங்கியுள்ளதாக கோட்டக் ஈக்விட்டி எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்க நுகர்வில் சீனாவுக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் ஓரளவு மறு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்விதம் மறு ஏற்று மதி செய்யப்படும் தங்கத்தைத் தவிர்த்து ரூ. 18 லட்சம் கோடி தங்கம் உள்நாட்டில் வாங்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு உள்ள மோகம் பொருளாதாரத்தை பாதிப்படைய செய்கிறது. 2011-12-ம் நிதி ஆண்டில் தங்க இறக்குமதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதாக கோட்டக் ஈக்விட்டி தெரிவித்துள்ளது.

வேர்ல்டு கோல்டு கவுன்சில் புள்ளிவிவரங்கள் படி 2015-ம் ஆண்டில் இந்தியாவில் ஆபரண தங்கத்துக்கான தேவை 77 சதவிகிதமாக இருந்தது. மொத்தம் 849 டன் தங்கத்தில் 654 டன் தங்க ஆபரணத்துக்கான தேவையாக இருந்தது. மீதி தங்கம் முதலீட்டுக்கான தங்கக் காசு மற்றும் தங்கக் கட்டிகளாக பயன்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close