Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த 5 ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் விலை உயராது; முகேஸ் அம்பானி தகவல்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை இதே அளவில் குறைவாக இருக்கும் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. முதல் முறையாக விலையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. தேவையை விட உற்பத்தி அதிகரித்ததே இதற்கு காரணம். சில வருடங்களுக்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் பீப்பாய்க்கு கீழே இருந்த உற்பத்தி, இப்போது 90 லட்சம் பீப்பாயாக இருக்கிறது. ஒபெக் நாடுகளால் உற்பத்தியை தடுக்க முடியவில்லை. இதன் காரணமாக தேவையை விட அதிக உற்பத்தி எனும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இப்போதைய சூழ்நிலையில் அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் அடிப்படையில் எந்த மாற்றமும் நடக்காவிட்டால் விலை குறைவாக இருக்கக்கூடும். இந்த விலை குறைவு, கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு சாதகமாக இருக்கும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close