Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைனர் பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை: மீறினால் ரூ.2,100 அபராதம்!

செல்போனில் பேசி பேசியே இந்தத் தலைமுறையினர் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நிற்கதியாக நிற்கிறார்கள் சிலர். இந்த நிலையில் குஜராத்தில் மெகசானா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 18 வயது நிரம்பாத பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை செய்யப்பட்டுள்ளது.

மைனர் பெண்கள் செல்போன் பயன்படுத்துவதால், அங்குள்ள பெற்றோர்களுக்குப் பல பிரச்னைகளை ஏற்படுகிறது. செல்போன் பயன்படுத்துவதால் சரியாக படிப்பதில்லை என்பதால் 18 வயது நிரம்பாத பெண்கள் செல்போனை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறினால் ரூ.2,100 அபராதம் விதிக்கப்படும் என்று சூரஜ் என்ற கிராமத்து பஞ்சாயத்து அறிவித்துள்ளது.

18 வயது நிரம்பாத பெண்கள் தங்களுடைய பெற்றோர்களின் செல்போன்களை வீட்டிற்குள் வைத்து பயன்படுத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அந்த கிராமத்து மக்கள் பெரும்பாலானோரின் ஒப்புதலின்படி எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தப் பஞ்சாயத்து தலைவர் தேவ்ஷி வங்கர் கூறுகையில், "கல்லூரி பெண்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று ஓரளவேனும் பிரித்தரியும் பக்குவம் இருக்கும். மேலும் அவர்களுக்கு செல்போன் அவசியமான ஒன்றாகவும் உள்ளது. ஆனால், பள்ளி செல்லும் பெண்களுக்குப் பக்குவம் இல்லாததால் அவர்கள் எளிதில் திசை மாறுகிறார்கள். அவர்களுக்கு செல்போன் மிக அவசியமாகவும் இருப்பதில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

இன்றைக்கு செல்போன் இல்லாத இளம்பெண்களே இல்லை என்று சொல்லலாம். இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரஜ் கிராமத்தில் 18 வயது நிரம்பாத பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை செய்யப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன...?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ