Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எதற்காக 5 கோடி வீடுகள்: பிரதமர் மோடி தகவல்!


இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் 2022-ம் ஆண்டிற்குள் 5 கோடி வீடுகள் கட்டப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வரும் 2022-க்குள் 5 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், அவற்றில் 2 கோடி வீடுகள் நகரங்களிலும், 3 கோடி வீடுகள் கிராமங்களிலும் கட்டித் தரப்படும் என்று மோடி கூறியுள்ளார்.

மேலும், இந்த திட்டம் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், 5 கோடி வீடுகள் கட்டித் தரப்படுவது உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அல்ல, ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தற்க்காகத்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ