Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய பட்ஜெட்... மக்கள் என்ன நினைக்கிறாங்க; ஆன்லைன் சர்வே முடிவு!

வரும் பிப்ரவரி 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகப் போகும் மத்திய அரசின் பட்ஜெட்டில் வாசகர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து ஆன்லைனில் சர்வே ஒன்றை நாணயம் விகடன் நடத்தியது. இந்த சர்வேயில் ஆறு முக்கியமான கேள்விகளைக் கேட்டிருந்தோம். இந்த சர்வே முடிவுகள் இதோ...

இது தவிர, இந்த பட்ஜெட்டில் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று வாசர்களிடம் கேட்டதற்கு, “விவசாயம் அரசுப் பணியில் சேர்க்க வேண்டும்; முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்க வேண்டும்; கல்விக் கடனுக்கு தள்ளுபடி வழங்கவேண்டும்; டெபாசிட்டுகள் மூலம் கிடைக்கும் வட்டியில் டிடிஎஸ் பிடித்தம் செய்வதற்கு பதில் வேறு முறை கொண்டுவர வேண்டும்; வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கும் வழிகளை அரசு மேற்கொள்ளவேண்டும்’’ என்று சொல்லி இருந்தனர்.

‘‘பங்குச்சந்தையில் ஒரு நிலைத்த தன்மையும், நாணய மதிப்பின் சரிவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்; சேவை வரியை உயர்த்தக் கூடாது, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; சிறு நிறுவனங்களுக்கு முதல் மரியாதை வழங்க வேண்டும்; கச்சா எண்ணெய் விலையை அரசே முடிவு செய்யவேண்டும்; தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை தரமான இலவசக் கல்வித் திட்டங்கள் வழங்கவேண்டும்; அனைத்து நோய்களுக்கும் தரமான இலவச மருத்துவம், அறிவுசார், உழைப்புசார் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்’’ என்றும் வேறு சிலர் கேட்டிருந்தனர்.

‘‘ஏழாவது ஊதியக்குழுவின் பரிசீலனையை அமல்படுத்த வேண்டும்; விவசாய மேம்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும்; விவசாய வளர்ச்சிக்காக தனி பட்ஜெட் அமைக்கவேண்டும்; அரசுப் பதவியில் உள்ளவர்களின் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும்; பட்ஜெட் தொடர்பான கருத்துகளை தொழிலதிபர்களை அழைத்து பேசுகிற மாதிரி, தொழிலாளர்கள், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்கள் கருத்தையும் கேட்கவேண்டும். மொத்தத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காதபடி, சாமானியனுக்கு உதவும் பட்ஜெட்டாக இருக்க வேண்டும்” என வாசகர்கள் பதிலளித்து இருந்தனர்.

- சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ